சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டிற்கு தொடர்புடையதாக கூறப்படும் 49 நிறுவனங்களின் பெயர் பட்டியலை சுவிஸ் அரசு சார்பற்ற அமைப்பான புருனோ மான்செர் நிதி வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் வெளியிடப்பட்டதின் நோக்கம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அரசியலில் நீண்டகாலமாக சம்பந்தப்பட்ட தாயிப்பின் சட்டத்திற்குப் புறம்பான சொத்துக்களை முடக்க வேண்டும் என்பதேயாகும்.
இம்முரண்பாடு, அவர் பில்லியன் கணக்கில் இந்த எட்டு நாடுகளிருந்து சொத்துக்களை சேர்த்துள்ளார் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இது ஒரு தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதியின் ஊதியத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஜப்பானின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி ஒரு சில குற்றச்சாட்டுகள், மற்றும் கடந்த மூன்று வருடங்களாக RM 4 .8 பில்லியன் சரவாக் மாநிலத்தின் கணக்கிலே காணவில்லை.
இலாபத்தை அடையும் அக்காலத்தில், சரவாக்கின் இயற்கை வளம் மற்றும் வழக்கமான உடன்பிறந்த உரிமைகள் (NCR) நிலம் அவர்களது பேராசையினால் ஒட்டுமொத்த மாநிலத்தின் மேம்பாட்டையே வீணாக்கி விட்டது.
இதில் வியப்புத்தக்க விஷயம் என்னவென்றால் வரலாற்றில் பல தடவை பல அறிக்கைகள் கொடுக்கப் பட்டிருந்தும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுதான். மலேசிய வரலாற்றிலே ஒரு பெரிய குற்றச் செயலாக இது இருக்கக் கூடுவதால் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நீதியோடும் நியாயத்தோடும் செயல்பட உறுதியாக்க ஏதாவது அடி கொடுத்தாக / செய்ய வேண்டுமா?
அதுமட்டுமில்லாது, முதலமைச்சரே இவ்விஷயத்தில் அமைதியாய் இருக்கிறார். அவர் தாம் குற்றமற்றவர் என நிறுபிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான அம்முதலமைச்சர் தகுந்த வரவு செலவினங்களின் ஆவணங்களை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் முதலமைச்சர் தாயிப்பின் வீட்டுச் சொத்துக்களை செயல்படுவதிலிருந்து தடுத்து நிறுத்திவைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்வாறு வெளிநாட்டு சொத்துக்களை செயல்படுவதிலிருந்து தடுத்து நிறுத்திவைக்க வேண்டும் என்பதை அறைய வேண்டும். அதேசமயத்தில் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு குற்றச்சாட்டை மேலும் ஆராய வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில் ,முதலமைச்சரின் இக்குற்ற செயலுக்கு உறுதுணையாய் இருந்து கை கொடுத்து வந்த அனைத்து தரப்ப்பினரின் மீதும் விசாரணை மேற்கொள்ள ஆயுத்தமாக வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
ஆகவே, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் இதில் சம்பந்தப் பட்ட அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சார்ல்ஸ் கேட்டு கொண்டார்.
சார்ல்ஸ் சந்தியாகோ
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்.
Tiada ulasan:
Catat Ulasan