சர்ச்சைக் குரிய இண்டர்லோக் நாவலில் “பறையா” என்ற சொல் நீக்கப்பட்டு, இந்நாவல் மறுபடியும் பள்ளிகளில் பயன்படுத்தப் படும் எனும் கல்வியமைச்சரின் முடிவு இந்தியர்களால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
ஏனெனில் இந்நாவலில் ” பறையா” என்ற சொல் மட்டும் பிரச்சனையல்ல. அதில் வரும் மணியம் மற்றும் சின் ஹுவாட் என்ற கதாபாத்திரமும் அவர்களை வர்ணிக்கும் முறையும் தவறாகத் தான் உள்ளது.
இந்த “பறையா” என்ற சொல்லை நீக்கி விட்டாலும் மணியம் எனும் கதாப்பாத்திரம் இந்தியரே. சின் ஹுவாட் எனும் கதாப்பாத்திரம் சீனரே. ஆக, அவர்களின் குணங்களை அந்நாவலில் எழுதியிருக்கும் வண்ணம், குறிப்பிட்ட இனத்தவர்களை அதாவது இந்தியர்களையும் சீனர்களையும் தாழ்மைப் படுத்தியும் இழிவுப் படுத்தியேத்தான் உள்ளது.
அதுமட்டுமில்லாது, இந்தியர்களும் சீனர்களும் குடியேறிகள் என எழுதப்பட்டிருப்பது, நமது உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க ஒரு ஆரம்ப நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது.
அதுமட்டும் அல்ல, இந்தியர்களையும் சீனர்களையும் குடியேறிகள் என கூறப்பட்டு நமக்குள் இருக்கும் உரிமைகளெல்லாம் பறிபோகி கடைசியில் மலேசியாவில் பிறந்தவராக நாம் இருந்தும் குரியுரிமை இல்லாமல் அந்நியராக முத்தரைக் குத்தப் பட்டு விடுவோம். நாளடைவில் இந்தியர்கள் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நடமாட நேரிடும் என சார்ல்ஸ் எச்சரித்தார்
இந்த நாவல் பள்ளிகளில் பயன்படுத்துவதால் பள்ளிகளில் ஆரம்பித்து, பிறகு மக்களிடையே மலேசியாவிடையே என நீண்டு இறுதியில் நாடுகளிடையே நாம் மலேசியாவில் குடியேறிகள் என்ற சின்னத்தை பதிக்கக் கூடும்.
ஒரே மலேசியா என நமது பிரதமர் முழக்கம் போட்டுக் கொண்டிருந்தாலும் இந்தியர்களின் கருத்தும் உணர்ச்சியும் புறக்கணிக்கப் பட்டுவருவது இண்டர்லோக் நாவல் விவகாரத்தின் வழி நிரூபணமாகிறது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார். தேசிய முன்னணி இந்தியர்களின் நலனை காக்கின்றது. இந்தியர்களின் பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்வதெல்லாம் வெட்ட வெறும் பொய் என தெளிவாகிறது
ஆகவே, நாவலை திருத்தம் செய்கிறோம் என்பதை நிறுத்தி விட்டு மீட்டுக் கொள்கிறோம் என அரசாங்கம் கூற வேண்டும். அப்படி ஒருவேலை, துணைப்பிரதமரால் இந்தியர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க முடியாமல் போனால், இவ்விவகாரத்தை தீர்க்க பிரதமர் முன்வர வேண்டும். ஒரே மலேசியா கொள்கையரான பிரதமர் இந்தியர்களை மதிப்பவராக இருந்தால் இண்டர்லோக் நாவலை தடை செய்து நிரூபிக்க தயாரா என சார்ல்ஸ் சவால் விடுத்தார்.
Tiada ulasan:
Catat Ulasan