மூலம் :- மலேசியா இன்று
1 Mar | செய்தி.
"போராட்டவாதிகள் கீழே தள்ளப்பட்டு, முகங்கள் தரையில் தேய்க்கப்பட்டு, உதைக்கப்பட்டு அதன் பிறகு கைது செய்யப்பட்டனர்."
"நான் லிபியாவில் நிகழ்ந்ததைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இது கோலாலம்பூரில் நிகழ்ந்த சம்பவமாகும். மலேசிய வளர்ச்சியின் சின்னமான இரட்டைக்கோபுரத்தின் அருகாமையில் நிகந்த கொடூரமாகும்", என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் உரிமைக் கட்சி உறுப்பினர்கள் போலீசாரால் கையாளப்பட்ட வன்மையான முறை குறித்து தமது ஆதங்கத்தை வெளியிட்டார் டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலை தடை செய்யக் கோரி அமைதி பேரணி நடத்தவிருந்த மலேசிய மனித உரிமைக் கட்சி உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் கோலாலம்பூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இரட்டை கோபுரத்திற்கு அருகே இருந்த ஒருவர், போலீஸ் அதிகாரிகள் நிருபர்கள் உட்பட போராட்டவாதிகளைத் திட்டித் தீர்த்ததாகக் கூறினார்.
சங்கரி-லா எனும் தங்கும்விடுதியிலும் இரட்டைக் கோபுர வளாகத்திலும் இருந்த இந்தியர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர். அவர்கள் விசாரணை செய்யப்பட்டு, அடையாள அட்டைகள் பரிசோதிக்கப் பட்டன.
நிருபர்களை அவர்களது நிருபர் அட்டையை காண்பிக்க சொன்னது மட்டுமில்லாமல் வலுகட்டாயமாக கைது செய்த காட்சிகளைப் படம் பிடித்ததற்காக நிருபர்களை நோக்கி போலீசார் சத்தமிட்டுள்ளனர்.
ஓரிரு நாள்களுக்கு முன், பிரதமர் நஜிப் துன் ராசாக், லிபியாவின் தலைவர் முவாம்மார் கடாபி ஆட்சியை எதிர்த்த மக்களின் மீது வன்மையாக நடந்துக் கொண்டதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"அவர் வன்மையைப் பயன்படுத்திருக்கக் கூடாது என நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு முக்கியமானது மக்களின் அபிப்பிராயத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதேயாகும்….அச்செயல்முறை சட்டபூர்வமானதாக இருத்தல் வேண்டும். அஃது மக்களின் ஆதரவின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்", என்று நஜிப் உபதேசம் வழங்கினார் என்பதைச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், கோலாலம்பூரில் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை "நமது அரசாங்கம் இரட்டை நாடகம் நடத்துவதைத் தெளிவாகக் காட்டுகிறது", என்றார்.
இண்டர்லோக் நாவல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் எழுத்தப்பட்டுள்ளது.
இச்செயல் மலேசியா இந்தியர்களின் கன்னத்தில் கொடுக்கும் அரை போன்றது. மலாய்க்காரர்களை குளிர்ச்சிப்படுத்த இன அரசியல் விளையாடுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்றார் சார்ல்ஸ். .
"நான் அல்லது சண்டை", இது கடாவியின் தாரக மந்திரமாகும். இங்கே, அரசாங்கம் கிழித்தக் கோட்டை தாண்டக் கூடாது என்பது தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ, தலைவர்களின் சுலோகம் ஆகும்.
அதுமட்டுமில்லாது, கடாபிதான் மக்கள் சாலை வரை வரக் காரணம் என்று சொல்லும் அதே வேளையில், இண்டர்லோக் நாவலுக்கு எதிராக எழும் தடைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சியின் தூண்டுதல்களே காரணம் என அம்னோ கூறுகின்றது.
வட ஆப்பிரிக்காவில் மக்கள் தங்களுடைய உரிமைக்காகப் போராடி வருவதை நாம் அறிவோம்.
இங்கு, இந்திய மலேசியர்கள் ஓர் இலக்கிய நூலால் இழிவுப்படுத்தப்பட்டதால் தங்களுடையத் தன்மானத்தைக் காக்க போராடுகின்றனர். ஒரு வேளை அம்னோ ஜனநாயகத்திற்கு மதிப்பு அளித்திருந்தால், அதன் தலைவர்கள் முறையான வழியில் கருத்து வேறுபாடு, விருப்ப வெறுப்புகளை வெளிப்படுத்த அனுமதித்திருப்பர். மாறாக அதை மறைக்க முயற்சித்திருக்க மாட்டார்கள்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் , 109 போராட்டவாதிகள் பிடிப்பட்டது எனக்கு தெரியாமல் இருந்தது.
போலீஸ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. மற்றும் நஜிப்பின் ஒரே மலேசியா கொள்கையும், இன ஒற்றுமையும், நாட்டின் ஒற்றுமையும் சூழியத்தில்தான் உள்ளது.
எதிர்க்கட்சிகளும் அரசு சார்பற்ற இயக்கங்களும் சுயேட்சை காவல் புகார் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த பேரணியில், காவல்காரர்களின் நடத்தைகளையும் செய்கைகளையும் பார்க்கும் போது, காவல் துறையைக் கண்காணிக்க ஒரு சுயேட்சை அணி மிக மிக அவசியம் என்பது தெளிவாகிறது.
"அதனால்தான், நான் அரசாங்கத்தை சுயேட்சை காவல் புகார் பிரிவு மற்றும் அத்துமீறல் அல்லது அதிகாரத்தை தவறாய் பயன்படுத்துதல் போன்றவற்றை கண்காணிக்கும் ஆணையத்தை அமைக்கும் படி வலியுறுத்துகிறேன். அதுமட்டுமின்றி, மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்", என்று சார்ல்ஸ் எழுதியுள்ளார்.
Tiada ulasan:
Catat Ulasan